பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படத் தயார் என வடக்கின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் எம்மிடம் உறுதிப்படுத்தினார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படத் தயார் என வடக்கின் அரசியல் தலைவர் ஒருவர் தன்னிடம் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தலவத்துகொடையில் நேற்று (13) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“பலமான அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரு மாற்றக் கட்டத்தை நாங்கள் கடந்து வருகிறோம்.
சில தீர்மானங்களுக்கும் சில செயற்பாடுகளுக்கும் பலமான அரசியல் அதிகாரம் தேவை.
2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் 2/3 அதிகாரத்தைப் பெற்றார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தோல்வியடைந்தார்.
2020ல் கோத்தபாய ரபக்ஷவுக்கு 2/3 அதிகாரம் கிடைத்தது.
ஆனால் இரண்டரை ஆண்டுகளில் பாராளுமன்றத்தின் 2/3 அதிகாரம் பறிபோனது. ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது.
எனவே, வலுவான சக்தி என்பது பாராளுமன்றத்திற்குள் உருவாக்கப்படும் பிரதிநிதித்துவம் மாத்திரம் போதுமானதல்ல.
வடக்கின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை சந்தித்தோம்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தமது குழு விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் எம்முடன் இணைந்து செயற்படாவிட்டாலும் வடக்கு மக்கள் எம்முடன் இணைந்து செயற்பட ஏற்கனவே தயாராகிவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்” என்றார்