எனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் ; பிரதமர்

தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் பொய்யான செய்திகளை பரப்ப முயற்சிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்திடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று அத்திடியில் நடைபெற்றது.
The Prime Minister’s Office has sent a clarification letter to the Daily Mirror newspaper regarding the report published by the Daily Mirror that there has been a conflict between the myself and the President regarding the appointment of Senior Professor Kapila Senaviratne as the chairman of the University Grants Commission.
විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාවේ නව සභාවතිවරයා ලෙස ජ්යෙෂ්ඨ මහාචාර්ය කපිල සෙනවිරත්න මහතා පත්කිරීම සම්බන්ධයෙන් මා සහ ජනාධිපතිවරයා අතර ගැටුමක් ඇතිවී ඇතැයි Daily Mirror පුවත්පත පළකොට තිබූ වාර්තාව සම්බන්ධයෙන් අග්රාමාත්ය කාර්යාලය, එම පුවත්පත වෙත කරුණු පැහැදිලි කිරීමේ ලිපියක් යොමුකොට තිබෙනවා.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்னவை நியமிப்பது தொடர்பில் எனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக டெய்லிமிரர் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் பிரதமர் அலுவலகம் டெய்லிமிரர் பத்திரிகைக்கு விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.


