VIDEO இணைப்பு > UNP கூட்டத்தில் கைகலப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட அதிகார சபையின் கூட்டம் தலைவர் அருந்திக பெர்னாண்டோ தலைமையில் இன்று (03) புத்தளத்தில் நடைபெற்றது.
அங்கு புத்தளம் மாவட்ட வேட்பாளர் அஞ்சன சதருவானுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட முகாமையாளரான நிமல் வர்ணகுலசூரியவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
அஞ்சன சதருவன் நிமல் வர்ணகுலசூரிய மீது குற்றம் சுமத்தியதுடன், அவரை தாக்க முற்பட்டதுடன், அங்கு காரசாரமான கருத்து பரிமாற்றம் இடம்பெற்றது.
மாவட்ட முகாமையாளரின் வரவேற்பு உரையில் அஞ்சன சதருவானின் பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தமையே மோதலுக்கு காரணம்.
20 வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சிக்காக தம்மை அர்ப்பணித்து பல இன்னல்களுக்கும் உள்ளானதாகவும், இன்று மாவட்ட முகாமையாளர் அதனை அறியாதது போன்று செயற்பட்டதாகவும் அஞ்சன சதருவன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மோதல் காரணமாக நிமல் வர்ணகுலசூரிய வெளியேற்றப்பட்டார்.
இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சிலாப பொலிஸார் இரண்டு தடவைகள் இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்ததாகவும், இந்தக் கூட்டத்தில் உணவும் பணமும் விநியோகம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் உணவு மற்றும் பண விநியோகம் தொடர்பில் சிலாபம் பொலிஸாருக்கும் புத்தளம் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
இது தொடர்பில், சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக்க ஹபுகொட, பணம் மற்றும் உணவு விநியோகம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, இது தொடர்பில் வெளிப்படைத்தன்மை இலங்கை நிறுவனம் பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

