News
இது L போர்ட் அரசாங்கம் ; ரணில்
அனுபவமற்ற அரசாங்கத்துடன் அனுபவமற்ற பாராளுமன்றம் அமைக்கப்பட்டால் அது நாட்டையே அழித்துவிடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மருதானையில் இன்று (11) இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இது அனுபவமில்லாத அரசு.. இப்போது எல்.போர்டு அரசு இருக்கிறது .எல்.போர்டு அரசும், எல்.போர்டு பார்லிமென்டும் இருந்தால் நிறைய பிரச்னைகள் வரும் நாடு அழிந்துவிடும் என மேலும் தெரிவித்தார்