News
கொழும்பு செல்லும் ரயிலின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் மின்கம்பம் ஒன்றில் மோதி பரிதாபமாக உயிரிழப்பு
ரயிலின் மிதிபலகையில் நின்று பயணித்த போது ரயில் பாதையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார்.
பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பயணித்தவர் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கனேமுல்லைச் சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்