கிழக்கு மாகாண அபிவிருத்திக்கென இந்த பட்ஜட்டில் குறிப்பிட்ட வகையில் நிதியொதுக்கப்படவில்லை..

மனநலம் குறைந்த பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்தியுள்ள அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் வரவேற்கத்தக்கதென, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம்;
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கென இந்த பட்ஜட்டில் குறிப்பிட்ட வகையில் நிதியொதுக்கப்படவில்லை.இது, கவலைக்குரிய விடயம்.
தனியார் மயமாக்கலுக்கு எதிரானது இந்த அரசாங்கம். எனினும்,தனியார் துறையின் துணையின்றி அபிவிருத்தியை மேற்கொள்வது சிரமம் என்பதை வெளிப்படுத்தாதுள்ளது. இதனால், மறைமுகமான சில முன்மொழிவுகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மனநலம் குறைந்த பிள்ளைகளின் விடயங்களில் கடந்த கால அரசாங்கங்கள் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தவில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் ஆழமாக கவனம் செலுத்தியுள்ளது. இந்த பிள்ளைகளைச் சேர்ந்த குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை
எதிர் நோக்கியுள்ளனர். இவ்வாறான பிள்ளைகள் நாடு முழுவதும் இருக்கின்றனர். இவ்வாறான பிள்ளைகளின் நலன்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது விசேட அம்சமாகும்.இது வரவேற்கத்தக்கது.அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு மூன்று வருடங்களுக்கு வரையறுத்த வகையில் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.



