News
பலகத்துறை அல் பலாஹ் அஹதிய்யா பாடசாலைக்கு இரண்டரை இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கினார் புரவலர் ஹாஷிம் உமர்

ஹாஷிம் உமர் பௌண்டேஷன் அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அஹதிய்யா பாடசாலைகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதற்கிணங்க நீர்கொழும்பு, பலகத்துறை அல் பலாஹ் அஹதிய்யா பாடசாலைக்கு இரண்டரை இலட்சம் ரூபா நிதியை புரவலர் ஹாஷிம் உமர் அஹதிய்யாவின் உதவி அதிபர் எம்.என்.எப்.நஸ்மியாவிடம் கையளித்தார்.
(அஷ்ரப் ஏ.சமத்)



