News

எனது தந்தை மாயமாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியதில் எவ்வித உண்மையுமில்லை ; ருஷ்டியின் சகோதரர்

எனது தந்தை மாயமாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியதில் எவ்வித உண்மையுமில்லை என ருஷ்டியின் சகோதரர் குறிப்பிட்டார்.

இன்று பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட பொது மக்கள் பாதுகாப்பு.

“மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வாலிபரின் வயது 22 ,ஈஸ்டர் தாக்குதல் நடந்து 6 வருடங்கள்,தொலைபேசி தொடர்பில் தெளிவின்மை ஏற்பட்ட போது தானும் தனது தந்தையும் இதே தொலைபேசியை பாவிப்பதாக அவர் கூறினார். அவரது தந்தையும் தற்போது மாயமாகியுள்ளர் “

என கூறியமை தொடர்பில் கருத்து வெளியிட்ட ருஷ்டியின் சகோதரர்

“இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எம்மையும்

பயங்கரவாத தடுப்பு பிரிவையும் அழைத்திருந்தது.எமது குடும்பம் சார்பில் எனது தந்தையே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று பிரசன்னமாகியிருந்தார்.அங்கே பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் பிரசன்னமாகியிருந்தனர்.ஏன் பாதுகாப்பு பிரிவை மேற்கோள் காட்டி பொதுமக்கள் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறான அறிக்கைகளை விடுகிறார் என நாம் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் கவலையும் அடைந்தோம்” என குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button