News

காஸாவை கைப்பற்றி அதை ஒரு சுதந்திர மண்டலமாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளேன்  என டொனால்ட் ட்ரம்ப் கட்டாரில்  இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது தெரிவிப்பு

இஸ்ரேல்   தொடர்ந்து காஸா பகுதியில் இராணுவத் தாக்குதலை மேற்கொள்ளும் வேளையில், அமெரிக்கா காஸாவை கைப்பற்ற விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று  தெரிவித்துள்ளார்.





“காஸாவை கைப்பற்றி அதை ஒரு சுதந்திர மண்டலமாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளேன்  என்று அமெரிக்க ஜனாதிபதி கட்டாரில்  இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது குறிப்பிட்டுள்ளார். 



இதேவேளை காஸாவைக் கைப்பற்றி அதை “மத்திய கிழக்கின்  செல்வந்த நகராக ” மாற்ற விரும்புவதாக ட்ரம்ப் கூறிய முந்தைய அறிக்கைகளை டோஹா கடுமையாக எதிர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



காஸா  மீதான 19 மாத இஸ்ரேலிய தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை விடுவிப்பதற்கும் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளில் கட்டார் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button