News

நாட்டை சுற்றி கடல் இருப்பதால் கோப்பையில் உப்பு தண்ணீரை கொண்டு போய் வீட்டில் உப்பு தயாரிக்க முடியாது.

உப்பளங்கள் அமைந்துள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் ஒரே நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கு அதிகமான மழை பெய்ததாக அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி குறிப்பிட்டார். இதன் காரணமாக ஆவியாகும் தன்மையை ஒரே மட்டத்தில் வைத்துக்கொள்ள முடியாது என அவர் கூறினார்.

ஊழியர்களால் அல்லது அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தமுடியுமான விடயமும் அல்ல என அவர் கூறினார்.அதனால் தான் உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கியதாக கூறிய அவர் நாட்டை சுற்றி கடல் இருப்பதால் கோப்பையில் உப்பு தண்ணீரை கொண்டு போய் வீட்டில் உப்பு தயாரிக்க முடியாது.

அதேவேளை 1 கிலோ உப்பு தேவை உள்ளவர்களுக்கு 10 -15 கிலோ உப்பை வாங்கி செல்ல அனுமதிக்க முடியாது.அதனால் மட்டுப்பட்ட அளவில் உப்பை விநியோக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Recent Articles

Back to top button