News
பொருளாதார மேம்பாடு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு – தலைமைப் பொறுப்பு லக்மாலிக்கு… ஆதரவாக நிலந்தி கொட்டஹச்சி

பொருளாதார மேம்பாடு மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் லக்மாலி ஹேமசந்திர நியமிக்கப்பட்டார்.இன்று (22) பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுவின் முதல் கூட்டத்தில், வழக்கறிஞர் லக்மாலி ஹேமசந்திரவை தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிரி பஸ்நாயக்க முன்மொழிந்தார். இந்த முன்மொழிவை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆமோதித்தார்.இந்தக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, வழக்கறிஞர் சாகரிகா அதாவுத, வழக்கறிஞர் நிலந்தி கொட்டஹச்சி மற்றும் திலின சமரகோன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



