News

Uk – Reading நகரில் ASLAM – Reading UK நடாத்திய வருடாந்த SUMMER SOCIAL 2025 நிகழ்வு

ASLAM-Reading UK இன்
SUMMER SOCIAL 2025

Reading நகரில் ASLAM – Reading UK நடாத்திய வருடாந்த SUMMER SOCIAL 2025 சிறப்பாக நிறைவு பெற்றது!

Reading, ஐக்கிய ராஜ்ஜியம் இலங்கை இஸ்லாமிய சமூகத்தை ஒருங்கிணைத்து சமூக, மார்க்க மற்றும் கலாசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் Association of SriLankan Muslims (ASLAM) – Reading UK அமைப்பின் வருடாந்த SUMMER SOCIAL 2025 நிகழ்வு கடந்த மே 25, 2025 அன்று மிகுந்த கோலாகலத்துடன் Reading நகரில் உள்ள Woodford Park ல் அமைப்பின் தலைவர் சத்தார் இஸ்மாயில் அவர்களின் தலைமையிலும் மற்றும் அமைப்பின் அங்கத்துவ உறுப்பினர்களின் சிறப்பான பங்களிப்புடனும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Reading நகரம், லண்டன் தலைநகருக்கு மிக அருகில், சுமார் 40 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு அமைதியான நகரமாகும். இங்கு சுமார் 150 இலங்கை இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்கள் பாரம்பரியம் மற்றும் மார்க்க பண்பாடுகளை நிலைநாட்டும் நோக்கத்தில் 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சமூக அமைப்பு, 2007ஆம் ஆண்டு ASLAM என்கிற பெயரில் ஐக்கிய ராஜ்ஜிய அரசு அனுமதியுடன் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஆகும். கடந்த 16 ஆண்டுகளாக இவ்வமைப்பு நமது சமுதாயத்தின் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் சேவை செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றி வருகிறது.

விழா சிறப்பம்சங்கள்:

SUMMER SOCIAL 2025 நிகழ்வானது Reading நகரத்தில் வாழும் இலங்கை முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமல்லாது, ஐக்கிய ராஜ்ஜியத்தின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வாழும் இஸ்லாமிய சகோதரர்களும் கலந்து கொண்ட ஒரு குடும்ப ஒன்றுகூடல் விழாவாகும்.

இதில்:

நமது நாட்டின் சுவையான உணவுகள், காய்கறிகள், தின்பண்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், இளைஞர்களுக்கான கிரிக்கெட், கரம், கயிறிழுத்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஐக்கிய ராஜ்ஜியத்துக்கான இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கியது விழாவின் முக்கியத்துவத்தை மேம்படுத்தியது.

சமூகத்தின் எதிர்காலக் கனவு:

ASLAM அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, Reading நகரத்தில் ஒரு பள்ளிவாசல் (Masjid) அமைத்தல் ஆகும். தற்போது, மார்க்க பணிக்காக ஒரு சமூக மையத்தை (Community Centre) பயன்படுத்தி வரும் இஸ்லாமிய சகோதரர்கள், எதிர்காலத்தில் தனிச்சார்பு இஸ்லாமிய வழிபாட்டிடமொன்றை (பள்ளிவாசல்) கட்டமைப்பதற்கான முயற்சியில் தொடர்ந்து அயராது உழைத்து வருகின்றனர். இந்நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதியும், இந்த உயரிய இலக்கை அடைவதற்கான ஓர் அடித்தளமாக அமைகிறது.

இவ்வாறான நிகழ்வுகள், வெளிநாட்டில் வாழும் நமது சமூகத்தின் ஒற்றுமை, பொறுப்பு உணர்வு, மற்றும் அர்ப்பணிப்பு மனப்பாங்கினை வெளிக்கொணர்கின்றன. Reading நகரில் அமைந்துள்ள ASLAM அமைப்பின் முயற்சி, இஸ்லாமிய சமூக வளர்ச்சிக்காக ஒரு முன்னோடியான செயற்பாடாக அமைந்துள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் முயற்சிக்கு அருள் தருவானாக. ஆமீன்!

தகவல்

S.T.Rauf

Reading -UK

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button