News

NPP க்கு ஆதரவு கொடுத்த குற்றம்?  புத்தளம் மாநகர சபை சமகி ஜன பல வேகய உறுப்பினர் நுஸ்கியின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தம்

புத்தளம் மாநகர சபையில் சமகி ஜன பலவேகய கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்துவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் முடிவுக்கு எதிராக, புத்தளம் மாநகர சபையின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் நியமனத்தில் செயல்பட்டதாகக் கூறி, இந்த உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டதாக கட்சி தெரிவித்துள்ளது.

இதன்படி, சமகி ஜன பலவேகய கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் பண்டார அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில், புத்தளம் மாநகர சபை உறுப்பினரான என்.எம்.என். நுஸ்கி அவர்களின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button