News
அகில இலங்கை YMMA பேரவையின் 75வது ஆண்டு வருடாந்த பொதுக் கூட்டம் – தேசியத் தலைவராக அம்ஹர் A. ஷரீஃப் தெரிவு

அகில இலங்கை YMMA பேரவையின் 75வது ஆண்டு வருடாந்த பொதுக் கூட்டம்:
2025-2026க்கான நிர்வாகிகள் தெரிவு இன்று (2025.06.29) YMMA தலைமையகத்தின் டாக்டர் AMA அஸீஸ் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தேசியத் தலைவராக அம்ஹர் ஏ.ஷரீஃப், தேசிய பொதுச் செயலாளராக இஹ்திஷான் என். ஹுசைன்தீன், தேசிய பொதுப் பொருளாளராக ஃபிர்தௌஸ் எம். தர்வீஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், போசகராக காலித் எம். பாருக் அத்துடன், ஃபாசில் எம். உவைஸ், ஜியாத் எம். ரியால் மற்றும் நாசர் எம். நிஃப்ராஸ் ஆகியோரும் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் உப தலைவர்களாக வெற்றி பெற்றனர்.
நாடளாவிய ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.





