News


“மஹிந்த நன்றி கெட்ட மனிதர்”
ஆரம்ப காலத்தில் பலரையும் எதிர்த்து மகிந்தவை ஆதரித்து வந்த உலமா கட்சித் தலைவர் முபாரக் மவ்லவி மனமுடைந்து பதிவு

நான் ம‌ஹிந்த‌வை 2005 முத‌ல் ஆத‌ரித்த‌மைக்காக‌ முழு முஸ்லிம் ச‌மூக‌த்திட‌மும்  ஏச்சு வாங்கிய‌வ‌ன்.
  ம‌ஹிந்த‌ புலிக‌ளை ஒழித்த‌ ஒரே காரண‌த்துக்காக‌ ம‌ட்டும் அவ‌ருக்கு நான் தொட‌ர்ந்து ந‌ன்றி கூறுப‌வ‌னாக‌ இருந்தேன்.

அவ‌ர் த‌னிப்ப‌ட்ட‌ வ‌கையில் எந்த‌வொரு சிறு உத‌வியும் செய்ய‌வில்லை.  அவ‌ருக்காக‌ நான் என‌து ப‌ண‌ம், நேர‌ம் என‌ செல‌வ‌ழித்தேன்.

ம‌ஹிந்த‌ அருகில் இருந்த‌ மேல் மாகாண‌  நாய்க‌ள் சில‌ரின் பேச்சை கேட்டு என்னை ஒதுக்கினார்.

அவ‌ர் வீட்டுக்கு, அல்ல‌து காரியால‌ய‌த்துக்கு நான் விரும்பிய‌ நேர‌ம் செல்லும் க‌வுர‌வ‌ம் என‌க்கு த‌ர‌ப்ப‌ட‌வில்லை.

2015ம் ஆண்டு அவ‌ர் தோல்வியுற்ற‌ போது அவ‌ரிட‌ம் ப‌த‌வி பெற்றிருந்த‌ ம‌வ்ல‌வி ஓடி விட்டார். நான் ம‌ட்டுமே அவ‌ரின் மிரிஹான‌ வீட்டுக்கு பாபு ச‌ர்மா குருக்க‌ளுட‌ன் சென்று ஆறுத‌ல் சொன்ன‌ ஒரேயொரு ம‌வ்லவி.

பின்ன‌ர் அவ‌ர்க‌ளின் கூட்ட‌ங்க‌ளுக்கு அழைத்த‌ன‌ர், சென்றேன்.

பின்ன‌ர் 2017ல் அந்த‌ மௌல‌வி மீண்டும் ம‌ஹிந்த‌விட‌ம் ஓடி வ‌ந்த‌தும் என்னை அவ‌ர‌து காரியால‌ய‌ம் ஒதுக்கிய‌து. அத‌ன் பின் ம‌ஹிந்த‌வை ச‌ந்திப்ப‌தை விரும்ப‌வில்லை.
2018 மேதின‌ மேடைக்கு அழைத்தார்க‌ள். போக‌வில்லை. வேண்டுமென்றே மைத்திரியின் அழைபை ஏற்று க‌ன்டி கூட்ட‌த்துக்கு சென்றேன்.

பின்ன‌ர் 2019ம் ஆண்டு பெசில் ராஜ‌ப‌க்ஷ‌ என் காலில் விழா குறையாக‌ என்னை அழைத்து உல‌மா க‌ட்சி பெர‌முன‌வுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ வேண்டும் என்றார்.

நானும் சென்று ப‌கிர‌ங்க‌மாக‌ ஒப்ப‌ந்த‌ம் செய்தேன். அன்று பெர‌முன‌வுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்த‌ ஒரேயொரு முஸ்லிம் க‌ட்சி உல‌மா க‌ட்சி ம‌ட்டுமே.

பின்ன‌ர் 2020 ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் என் சொந்த‌ ப‌ண‌த்தை செல‌வு செய்து கோட்டாவுக்கு பிர‌ச்சார‌ம் செய்தேன்.

அவ‌ர் ஜ‌னாதிப‌தி ஆகி ஜ‌னாசாவை எரித்து துரோகியானார்.

ம‌ஹிந்த‌வும் பிர‌த‌ம‌ர் ஆனார்.

அதுவ‌ரை அவ‌ரை ப‌ழித்த‌ ப‌ல‌ர் அவ‌ரிட‌ம் ஓடிச்சென்று ப‌த‌விக‌ள் ச‌லுகைக‌ள் பெற்ற‌ன‌ர். நான் போக‌வில்லை. அழைப்பின்றி போவ‌தில்லை என்ப‌து என் கொள்கை.

ம‌ஹிந்த‌வுட‌ன் நான் ப‌ட்ட‌ க‌ஷ்ட‌த்துக்கு அவ‌ர் எம‌து க‌ட்சிக்கு உத‌வியிருந்தால் க‌ல்முனை முனிசிப்ப‌லை நாம் கைப்ப‌ற்றியிருப்போம். ந‌ன்றி கெட்ட‌ ம‌னித‌ர். எம‌து க‌ட்சிக்கு ஒரு சிறு உத‌வியும் செய்ய‌வில்லை. ம‌ஹிந்த‌வை ஏசி ஓட்டு எடுத்த‌ முஸ்லிம் காங்கிர‌சுக்கு அனைத்தையும் அள்ளி கொடுத்தார்.

புலிக‌ளை ஒழித்த‌ ஒரு விட‌ய‌த்துக்கு ம‌ட்டுமே நான் ம‌ஹிந்த‌வை ம‌திக்கிறேன்.
த‌னிப்ப‌ட்ட‌ வ‌கையில் அவ‌ர் ந‌ன்றி கெட்ட‌வ‌ர்.

இதையெல்லாம் ம‌ஹிந்த‌ ம‌ர‌ணித்த‌பின் எழுத‌லாம் என்றிருந்தேன். உயிரோடு உள்ள‌ போதே எழுதுவ‌துதான் துணிச்ச‌ல் என்ப‌தால் எழுதுகிறேன்.

முபாற‌க் முப்தி.
உல‌மா க‌ட்சி.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button