News

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் முன்னாயத்தம் இல்லாத படுகொலை என பாராளுமன்றில் சாணக்கியன் அறிவிப்பு

அனைத்து எதிர்கட்சினரும் எடுத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியினரும் சபையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சற்றுமுன் தெரிவித்தார்.



இன்றைய பாராளுமன்ற அமர்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.



தொடர்ந்து பேசிய அவர்,



வடக்கு கிழக்கு மாத்திரமல்ல நாடு பூராகவும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை விபரம் நேற்று மாலை 6மணிவரை தரப்படவில்லை. அரசாங்கம் தகவல்களை வெளியிட தயக்கம் காட்டுகின்றது.



இவ்வாறானதொரு நிலையில் எதிர்கட்சியை சேர்ந்த நாம் அனைவரும் ஓரணியாக நின்று இன்றைய நாளில் பாராளுமன்றத்தில் இருந்து எங்களுடைய மாவட்டங்களிலுள்ள மக்களின் குறைபாடுகளை மற்றும் நிவாரணப்பணிகளை எவ்வாறு செய்யலாம் என்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.



காரணம் நாங்கள் மாத்திரமல்ல பெரும் சிரமத்துக்கு மத்தியில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வந்துள்ளோம். மக்கள் நலன் தொடர்பில் பல விடயங்களை சிந்தித்து செயற்படுத்த வேண்டியுள்ளது,



அதற்காக சில மணிநேரம் கேட்டும் சபாநாயகராகிய நீங்கள் அதற்கான வாய்ப்பை தரவில்லை. இந்த அனர்த்தம் முன்னாயத்தம் இல்லாத படுகொலையாகவே கருதப்படுகின்றது,



ஆகவே, மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கமுடியாத இந்த உயரிய சபையில் இருந்து வெளியேறுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button