News

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான வழக்குகளை பிறகு பார்த்துக் கொள்வோம் – பணம் புரட்ட வேண்டுமென்றால் ரணில், மைத்திரி மஹிந்த, சந்திரிக்கா எல்லாரையும் அழைத்து பேசுங்கள் ; ரவூப் ஹக்கீம்


ஓய்வுபெற்ற எங்களுடைய ஜனாதிபதிகள் இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க, அனுபவம் உள்ளவர்கள். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, எமது முன்னாள் மைத்திரிபால சிறிசேன, எல்லோரையும் இந்த அனர்த்த நேரத்தில் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்., 

இந்தக் தேசியப் பேரழிவு குறித்து, ஒன்றாகச் சேர்ந்து பேச வேண்டும். இதை நான் கட்சித் தலைவர் என்ற வகையில் முன்வைக்கும் வேண்டுகோளாகும்.


ஏனெனில், இந்தப் பேரழிவில், நாம் அவர்களின் வழக்குகள் பற்றிப் பிறகு வைத்துக் கொள்ளலாம். வழக்குகளை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை.

ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில் எங்களுக்குப் பிரச்சினையும் இல்லை. அதைச் செய்யுங்கள். ஆனால், அதற்கு இடையிலே, இந்தப் பேரழிவில் எதிர்க்கட்சியும், நாட்டில் உள்ள தலைவர்கள் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.

இதை நான் ஜனாதிபதி அவர்களிடம் பணிவுடன் செய்யும் வேண்டுகோளாகும்.


ஏனெனில், இதற்கு யாராலும் தாங்க முடியாது. எந்த அரசாங்கத்தாலும் இத்தகைய பணத்தைக் தேட முடியாது. அதுமட்டுமல்ல. குறைந்தபட்சம், இல்லையென்றால், நாம் IMF ஐ அழைத்து, IMF உடன் பேசி, நாம் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இன்னும் மூன்று வருடங்களால் அல்லது இன்னும் தள்ளிப் போடலாம்.

குறிப்பாக இருதரப்பு கடன்கள் குறித்து பேசலாம்.
ஆகவே, இந்தக் கட்டாயங்களில் இரண்டு அல்லது ஒன்றை நாம் செய்தே ஆக வேண்டும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button