VIDEO > ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பேருவளை தொகுதியின் கட்சிச் செயற்பாட்டாளர் கூட்டத்தில் கடும் முறுகல் நிலை..

ஐக்கிய மக்கள் சக்தியின் பேருவளை தொகுதியின் கட்சிச் செயற்பாட்டாளர் கூட்டத்தில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
பேருவளை, ஹெட்டிமுல்ல பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்தச் செயற்பாட்டாளர் கூட்டம் நடைபெற்றது.
அங்கு பேருவளை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியின் இணை அமைப்பாளர் இப்திகார் ஜமீல் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அதிருப்தியடைந்த கட்சிச் செயற்பாட்டாளர்கள் அவருக்கு எதிராகக் கோஷமிட்டுத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதன்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதம் காரணமாகக் கூட்டத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன ஒன்றிணைந்து அமைத்துள்ள பேருவளை நகர சபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் தொகுதி அமைப்பாளரே பொறுப்புக்கூற வேண்டும் என அக்கூட்டத்தில் கலந்துகொண்ட செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை, குறித்த இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணிக்கு எதிராகத் தமது கடும் எதிர்ப்பையும் அவர்கள் இதன்போது வெளிப்படுத்தினர்
https://youtu.be/UPbmWQjP-QA?si=YoGGuGn2RGnVc-5u



