News
இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று மாலை (19) அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் குழு ஒன்று அழைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது .
இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை .



