News

எங்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வேண்டாம் – இந்த நாட்டின் ஆட்சி அதிகாரமே வேண்டும் ; தெரண திலீத் ஜெயவீர

சர்வஜன பலய (Sarvajana Balaya) கட்சியிடம் இருப்பது தனிநபர் மையப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் அல்ல என்றும், அது நாட்டை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் ஒரு வேலைத்திட்டம் என்றும் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.


கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


கேள்வி – பொது எதிர்க்கட்சி ஒன்றிணைந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பொறுப்பேற்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?


“நாங்கள் எதிர்க்கட்சித் தலைவராகுவதற்காக அரசியல் செய்யவில்லை. நாட்டை ஆட்சி செய்வதற்கே (அதிகாரத்தை கைப்பற்றவே) நாங்கள் அரசியல் செய்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்காக அரசியல் செய்பவர்கள் இருக்கக் கூடும். எங்களுக்கு அவ்வாறு அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை.

எங்களிடம் தனிநபர் மையப்படுத்தப்பட்ட அரசியல் இல்லை. நாட்டை வெற்றிபெறச் செய்வதற்கே நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.

பதவிகளைப் பற்றி சிந்திக்காமலேயே நாங்கள் அரசியல் செய்கிறோம்.”

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button