News

திசைகாட்டி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் இரகசிய கலந்துரையாடலில்… முக்கிய இடத்திற்கு கிடைத்த வீடியோக்கள்..

தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பொதுத்தேர்தலில் பல மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவு செய்யப்பட்ட சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறிப்பிட்ட ஒரு வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் காட்சிகளை உள்ளடக்கிய சிசிடிவி (CCTV) காட்சிகள் உள்ளதாகவும் அறியமுடிகிறது.

இந்த இரகசிய கலந்துரையாடல் அரசாங்கத்தின் மீதான ஏமாற்றத்தினால் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் விடயம் குறித்து கலந்துரையாடுவதற்காக நடத்தப்பட்டதா என்பது குறித்து அரசாங்கத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினதும் எதிர்க்கட்சியினதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

அமித் மதுரங்க கமகே

Recent Articles

Back to top button