News

15 வயது சிறுமியை  பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றம் தொடர்பில் தேரர் ஒருவர் கண்டி பொலிஸாரால் கைது

பகிரவகந்தையில் உள்ள விகாரை ஒன்றில் பணியாற்றும் 25 வயதுடைய தேரர் ஒருவர், 15 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, சிறுமியின் தந்தையின் சகோதரரான இந்த சந்தேக நபர், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து மே 20 அன்று காவலில் எடுக்கப்பட்டார்.


இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், பகிரவகந்தையைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவரையும் பொலிஸார் அன்றைய தினமே கைது செய்தனர்.


சந்தேக நபர்கள் இருவரும் மே 21 அன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தேரர் ஜூன் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, பெண் சந்தேக நபர் தலா ரூ. 200,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.


இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button