News

என்னை சி ஐ டிக்கு அழைத்தால் தரமற்ற நிலக்கரி கப்பல் நாட்டிற்கு வந்துள்ளது என்று அர்த்தம். !

“கடந்த காலங்களில் அரசாங்கங்களினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் போது, அமைச்சருக்கு கமிஷன் ஒன்று கிடைத்துள்ளது. ஆனால் இன்று எரிபொருள் விலை அதிகரித்து, விலையை உயர்த்த அரசாங்கத்திற்கு நேர்ந்துள்ள முதன்மையான காரணி என்னவென்றால், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தமையால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட, மின்சார உற்பத்திக்காக இன்று மேலதிகமாக எரிபொருளை எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஏழு, எட்டு லட்சம் லீட்டர் அளவிலான எரிபொருள் எரிக்கப்பட வேண்டும். அதேபோன்று, உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்துள்ளது இந்நாட்டு மக்களே என்பதால், அந்த நட்டத்தை மக்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் நுகேகொடவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,

“நாட்டின் மக்களிடம் கேட்டால் அரசாங்கத்தைப் பற்றி மக்கள் சரியான பதிலை வழங்குவார்கள். ஏனென்றால் தெளிவாகவே அரசாங்கம் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை. அனைத்து சுமைகளையும் மக்கள் மீது சுமத்துகிறார்கள். கடந்த காலத்தில் விலை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தேவையா என்று கேட்டவர்கள், இப்போது ஆட்சிக்கு வந்து தங்களது திறமையின்மை, ஊழல், மோசடி மற்றும் நட்டங்கள் அனைத்தையும் மக்கள் மீது சுமத்துவது போல் தெரிகிறது.

கௌரவ ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும். ஏனென்றால், அவர் மேடைகளில் தீர்ப்பு வழங்குகிறார், இந்த நாட்டின் ஜனாதிபதி. இரண்டாவது விடயம், வழக்குத் தவணை நாளன்று நீதிமன்றத்திற்கு வர முடியும். நாடாளுமன்றத்தில் நான் பேசும்போது அருகில் வருவதைப் போல, திசைகாட்டியின் (மாலிமாவ) 159 பேரும் வழக்குத் தவணை நாளன்றும் நீதிமன்றத்திற்கு வந்து அமர்ந்திருக்குமாறு அழைக்கிறேன். அப்போதுதான் கண்ட கண்ட இடங்களில் பேசாமல் அவர்களுக்கு உண்மை என்னவென்று தெரியவரும். அந்த 159 பேரும் அந்த நாளில் நீதிமன்றத்திற்கு வாருங்கள்.

இல்லையெனில் உங்களது ஜனாதிபதியிடமே கேளுங்கள், அவரே வழக்குத் தீர்ப்புகளை வழங்குகிறார்.

ஒரு தேர்தலை நடத்திப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருபுறம் மக்களுக்கு தங்களது பிரதேச தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். அதேபோன்று, இன்று மாகாண சபைகளில் உள்ள அதிகாரம் மற்றும் நிதியை, நிர்வாகியான ஜனாதிபதியின் அரசியல் பிரதிநிதிகள் ஒன்பது பேருக்கு வழங்கியுள்ளனர். அதனை ஒன்பது அரசியல் பிரதிநிதிகளுக்கு வழங்காமல் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் அவர்கள் மக்களுக்குப் பொறுப்பு கூறுவார்கள். இல்லையெனில், நேற்று முன்தினம்கூட ஒரு ஆளுநர் ராஜினாமா செய்தார் அல்லவா? மற்றவர்களும் காலம் நெருங்க நெருங்க ராஜினாமா செய்துவிட்டு, தத்தமது நாடுகளுக்குச் செல்வார்கள். ஆனால் இறுதியில் பொறுப்புக்கூற யாரும் இருக்க மாட்டார்கள்.

அரசாங்கம் மூன்றரை வருடங்கள் இருக்குமா இல்லையா என்பதை சட்டப்பூர்வமாக தேர்தல் ஆணைக்குழுவும் இந்த நாட்டு மக்களுமே தீர்மானிக்க வேண்டிய விடயமாகும். ஆனால், அரசாங்கம் அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் வரை, அந்த அரசாங்கத்திடம் வேலை வாங்குவதுதான் நாங்கள் செய்யும் காரியம். எனவே நாம் அரசாங்கத்திடம் வேலை வாங்குவோம், அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம், அரசாங்கத்தின் திறமையின்மையை வெளிப்படுத்துவோம், அரசாங்கம் இந்நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை நாம் அரசாங்கத்துடன் தொடர்ந்து மோதுவோம்.

புதிய நிலக்கரி கப்பலும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்களே. என்ன செய்வது, வேலை தெரியாது அல்லவா? திருட்டும் மோசடியும்தான். அடுத்த நிலக்கரி கப்பலும் தரமற்றதாக மாறியவுடன், அடுத்த நாளே என்னை சி.ஐ.டி. (CID) க்கு அழைப்பார்கள்” என்றார்.

Recent Articles

Back to top button