News

ஜொன்ஸ்டனுக்கு பொதுஜன பெரமுனவில் முக்கிய பதவி..

வரவிருக்கும் மாகாண சபைத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதன்மைக் குழுவின் தலைமைத்துவத்தை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலேயே இந்த விசேட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொதுச்செயலாளர், கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இதற்கமைய, எதிர்காலத்தில் மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் மேலும் பல உபகுழுக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த சாகர காரியவசம்,

“இந்த முதன்மைக் குழுவில் அரசியல் களம் மற்றும் அடிமட்ட மக்கள் குறித்து நல்ல புரிதலைக் கொண்ட முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினர் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஒரு கட்சி என்ற ரீதியில் நாம் எந்த நேரத்திலும் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Recent Articles

Back to top button