📢 ஜனாஸா அறிவித்தல் – கல்பிட்டி பெரியக்குடியிருப்பைச் சேர்ந்த அரஃபாத் அவர்கள் இத்தாலியில் 🇮🇹 காலமானார்கள்

📢 ஜனாஸா அறிவித்தல்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 🤲
கல்பிட்டி பெரியக்குடியிருப்பைச் சேர்ந்த அரஃபாத் அவர்கள் இத்தாலியில் இன்று வபாத்தானார்கள்.
அன்னார் லோடெக்ஸ் வாடி இக்பால் மற்றும் ஃபர்ஜின் ஆகியோரின் அன்பு மகனும், ஹப்சாவின் அன்புக் கணவரும், லியாவின் அன்புத் தந்தையும் ஆவார்.
மேலும், இக்ராம், அர்ஷத், ஹஸ்னா ஆகியோரின் சகோதரரும், மிப்ளா, மிப்றாஸ், சிப்னா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
திடீர் சுகையினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்
🕌 அன்னாரின் ஜனாஸா மற்றும் நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
🤲 யா அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து, நற்கிரியைகளை ஏற்று, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அருள்புரிவாயாக.
அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையையும் ஆறுதலையும் வழங்குவாயாக. ஆமீன்.



