News
பேஸ்புக் மூலம் இணைந்து கேளிக்கை விருந்து நடத்திய 28 ஆண்களும் பெண்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சுற்றி வளைப்பில் சிக்கினர்

பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) இணைந்து 2026.06.06ஆம் திகதி இரவு, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போனதுவ பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில், அங்கு இடம்பெற்று வந்த முகநூல் கேளிக்கை விருந்து (Facebook Party) ஒன்று முற்றுகையிடப்பட்டது.
இந்த சுற்றிவளைப்பின் போது 225 மில்லி கிராம் கொக்கேன், 08 கிராம் 125 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 02 கிராம் 400 மில்லி கிராம் கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 25 ஆண்களும் 03 பெண்களும் உட்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட இவர்கள் அனைவரும் படபொல, ஊரகஸ்மன் சந்தி, பலபிட்டிய, ஹோமாகம, பேருவளை, அம்பலாங்கொடை, மீட்டியாகொட, வதுகெதர மற்றும் அஹுங்கல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

