News
கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் பெரிய பள்ளம் ஒன்றிற்குள் விழுந்து விபத்துக்குள்ளான லொரி

கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையோரப் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதிப் புனரமைப்பு அல்லது கட்டுமானப் பணிகளுக்காகத் தோண்டப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளுடன் கூடிய பெரிய பள்ளம் ஒன்றிற்குள்ளேயே, குறித்த சிறிய ரக லொறி விழுந்துள்ளது.
விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து லொறிக்குள் இருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், விபத்து குறித்து பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

