குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் அந்நாட்டு காவல்துறையால் கைது – இவர்களிடம் இருந்து ஹஷிஷ், ஹெரோயின், போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
குவைத் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்களுக்கு மேலதிகமாக, இரண்டு குவைத் நாட்டவர்கள், ஓர் இந்தியர் மற்றும் மேலும் இரு வெளிநாட்டவர்கள் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து ஹஷிஷ் (Hashish), ஹெரோயின், போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களை அளவிடும் கருவிகள் மற்றும் பொதி செய்யும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக குவைத் நாட்டின் குற்றவியல் பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



