News

வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதில் மூன்று இந்திய மாலுமிகள் பரிதாபமாக உயிரிழப்பு

‘செடெபெல்லோ’ என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதில் இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இந்த தாக்குதலானது,நேற்று (10)இடம்பெற்றபோது முன்னனதாக, இந்திய அரசு  மூவர் காணவில்லை என தெரிவித்திருந்த நிலையில் ஒருவர் மாத்திரமே காணாமல் போய் உயிரிழந்தது தெரியவந்துள்ளது .



இந்த விபத்தின்போது டெக் கேடட் ஆதித்யா சர்மா மற்றும் என்ஜின் ஃபிட்டர் சிவானந்த் சௌராசியா ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், தலைமைப் பொறியாளர் பட்நாலா சுரேஷ் என்பவரே காணாமல் போய் உயிரிழந்து உள்ளார்



மேலும், ‘மேரிவெக்ஸ்’ கப்பலில் இருந்த மற்ற இந்திய மாலுமிகள் ஓமான் நாட்டு இராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.



திங்கள்கிழமை நடந்த தாக்குதலை விட, புதன்கிழமை நடந்த இந்தத் தாக்குதலை இந்தியா வெளிப்படையாகக் கண்டித்துள்ளது.



எனினும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் நாட்டில் இல்லாததால், அமெரிக்க தூதரகத்தின் செயல் தலைவர் நேரில் வரவழைக்கப்பட்டு, இந்தியாவின் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button