News
“திசைகாட்டி அரசு இல்லாதிருந்தால், மனிதர்கள் பசியால் இறந்திருப்பார்கள்.”
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியில் இல்லாவிட்டால், இந்நாட்டு மக்கள் பசியால் இறக்க நேரிட்டிருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று உலகின் பல நாடுகளில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த உலகளாவிய நெருக்கடிகள் தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிப்புறக் காரணிகளால் ஏற்படுகின்றன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, உலகில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக பல நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும், இலங்கையும் அந்த நிலைமையின் தாக்கங்களுக்கும் பாதிப்புகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் ஜகத் மனுவர்ண மேலும் குறிப்பிட்டுள்ளார்.”



