News

அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இலங்கையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எல்லினோ (El Niño) காலநிலை மாற்றத்தின் விளைவாக, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் (முன்னறிவிப்பு) அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

தற்போது பலவீனமான எல்லினோ நிலை காணப்பட்ட போதிலும், அது படிப்படியாக வளர்ச்சியடைந்து நவம்பர் மாதத்திற்குப் பிறகு பலத்த அல்லது மிக பலத்த எல்லினோ நிலையை அடையக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி காலப்பகுதியில் இந்த எல்லினோ நிலைமை மிக பலத்த நிலையை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் 60% க்கும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Recent Articles

Back to top button