News
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புலிகளின் தங்கத்தை தேடி காவல்துறை வேட்டை : அகழ்வுப் பணியில் ஏமாற்றம்

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை, கீழ்க்கண்டம் பகுதியில் உள்ள தனியார் வயல் காணியொன்றில், புதன்கிழமை (17) அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த காலத்தில், விடுதலைப் புலிகள் குறித்த காணியில் ஆயுதங்களையும் தங்கத்தையும் நிலத்தில் புதைத்து மறைத்து வைத்திருப்பதாகக் கிடைத்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த காணியில் ‘பக்கோ’ (Backhoe) இயந்திரம் மூலம் மண் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எவ்வித தடயப் பொருட்களும் கிடைக்கப்பெறவில்லை. இதனையடுத்து, அகழ்வுப் பணிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன.



