News

“எனக்கு எங்கு மாளிகைகள் உள்ளன.. நான் எங்கிருந்து வந்தேன்.. என்பதை யாரும் ஒரு பிரச்சினையாக்கிக் கொள்ளத் தேவையில்லை.”

தனக்கு எங்கு மாளிகைகள் உள்ளன.. நான் எங்கிருந்து வந்தேன் என்பது எவருக்கும் பிரச்சினையல்ல: லால் காந்த

தான் அனுராதபுரத்திலிருந்து வந்தேனா அல்லது எங்கிருந்து வந்தேனா என்பது குறித்து கேள்வி எழுப்ப எவருக்கும் உரிமையில்லை எனவும், கண்டி நகரில் தனக்கு மாளிகை ஒன்று உள்ளதா என்பதைத் தேடிக் கண்டறிவது புலனாய்வு ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் எனவும் விவசாய, காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே. டி. லால் காந்த கண்டி நகரில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:

“இலட்சியப் பிரமுகர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் இந்நாட்டில் ஆட்சியில் இருந்தபோது, மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்தனர். இப்போது அவர்களுக்கு அதிகாரமும் இல்லை, வரப்பிரசாதங்களும் இல்லை. குறைந்தபட்சம் மக்களின் பணத்தில் பெறப்பட்ட ஓய்வூதியம் கூட இல்லை. வாகனங்கள் இல்லை, மாளிகைகள் இல்லை. அப்படி நடக்கும்போது அவர்கள் பதற்றமடைகிறார்கள். அவர்களுக்கு மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

ஆனால் இப்போது, நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடைய பிரமுகர்கள் என்று கூறிக்கொள்ளும் பலமிக்க அரசியல்வாதிகளைக் கைது செய்து வருகிறோம். விசாரணைகளை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவினரால் அவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும். ஜனாதிபதிகள் கூட வரவழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன. இதனாலேயே இப்போது அவர்கள் பதற்றமடைந்துள்ளனர்.

எனக்கு எங்கு மாளிகைகள் உள்ளன? இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் உருவாக்குவது மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள்தான். நாம் இதற்கெல்லாம் பதற்றமடைய மாட்டோம். நான் அனுராதபுரத்திலிருந்து வந்தேனா அல்லது எங்கிருந்து வந்தேனா என்பதை எவரும் ஒரு பிரச்சினையாகவோ அல்லது சவாலாகவோ மாற்றிக்கொள்ளத் தேவையில்லை,” என அமைச்சர் லால் காந்த ஊடகங்கள் முன்னிலையில் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button