News

பிரதியமைச்சர் அஷ்ஷேக் முனீர் மௌபர்  தலைமையில் முஹர்ரம் முஸ்லிம் புதுவருட கொண்டாட்டம்

(அஷ்ரப் ஏ சமத்)
இஸ்லாமிய புது வருடம் 1448 (2026) முன்னிட்டு முஸ்லிம் சமய,பண்பாட்டு திணைக்களம் ஏற்பாடு செய்த முஹர்ரம் புதுவருட நிகழ்வுகள் நேற்று இரவு 17.06.2026 மினுவான்கொடை நகர் ஜம்ஆப் பள்ளிவாசலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சமய விவகார கலாசார பிரதியமைச்சர் அஷ்ஷேக் முனீர் மௌபர், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவான் திலக்க ஜயக்கொடி மினுவான்கொடை நகர சபைத் தலைவர்  ஜானக்க செனவிரத்தின மற்றும் பிரதேச சபைத் தலைவர்.  அசங்க சஜ்ஜீவ
பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர். ஹசைன் ஹாஜி,உப தலைவர் நுார்தீன் ஹாஜி செயலாளர் சியாத் ஹாஜி. மற்றும் முஸ்லிம் சமய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் என்.நியூஸ், உதவிப் பணிப்பாளர் அப்ரூஸ் அஹமட், ஊடக இணைப்பாளர் முப்தி உட்பட ஊர்மக்கள் குர்ஆன் பாடசாலை மாணவ மாணவிகள், கலந்து கொண்டனர்.


அத்துடன் குர்ஆன் பாடசாலை மாணவர்களது நிகழ்ச்சிகளும், முஹர்ரம் பற்றிய விசேட உரை அஷ்ஷேக் அர்கம் அபுல் ஹஸன் (அஷ்அரி) துஆப் பிராத்தனையும் இடம் பெற்றது.


அத்துடன் நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button