News

பொது மயானத்தில்,  ஒரு புதிய கல்லறை மற்றும் பழைய கல்லறையை தோண்டி பலி பூஜை மற்றும் மாந்திரீகச் சடங்குகளில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள்  பொலிஸாரால் கைது #இலங்கை

பொலன்னறுவை, பகமூண – யாய 25 கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்குள் நுழைந்து, பலி பூஜை மற்றும் மாந்திரீகச் சடங்குகளில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் பகமூண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சனிக்கிழமை (20) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாய 25 கிராம பொது மயானத்தில், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட ஒரு கல்லறை மற்றும் பழைய கல்லறை என இரண்டு இடங்கள் தோண்டப்பட்டு, அதற்குள் ஏதோ ஒரு பொருள் உள்ளே வைக்கப்பட்டுள்ளது.



அங்குள்ள கல்லறைகளின் மீது களிமண்ணால் செய்யப்பட்ட மனித உருவங்கள் போன்ற பொம்மைகளை வைத்து, விளக்குகளை ஏற்றி இப்பெண்கள் விசித்திரமான முறையில் பூஜைகளைச் செய்துள்ளனர். அந்த வழியாகச் சென்ற ஒருவர் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக கிராம மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.



அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக, பகமூண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடங்குகளில் ஈடுபட்டிருந்த இரு பெண்களையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button