சவூதி அரேபியாவில் அராம்கோவிற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 14 பேரும் உயிரிழப்பு

இன்று ஞாயிற்றுக்கிழமை பதிவான இரண்டு தனித்தனி விமான விபத்துகளில் சவூதி அரேபியா மற்றும் பிரான்சில் ஏற்பட்ட கொடூர விபத்துக்களுடன் மொத்தம் 25 பேர் கொல்லப்பட்டனர்.
சவூதி அரேபியாவில், நாட்டின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ராஸ் தனூராவில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான சவூதி அராம்கோவிற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 14 பேரும் பலியாகினர்.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொரு தனி சம்பவத்தில், வடகிழக்கு பிரான்சின் டோம்ப்ளைன் நகருக்கு அருகே சிவிலியன் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த விமானம் வான்குடை (பாரசூட்) பள்ளிக்கு சொந்தமானது என்றும், பலியானவர்களில் பைலட், ஐந்து மாணவர்கள் மற்றும் ஐந்து பயிற்றுனர்கள் அடங்குவர் என்றும் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



