News

“இரண்டு வருடங்களாக எங்களை திட்டுகிறார்கள்..எங்களுக்கு மந்திரக்கோல் கிடைக்கவில்லை.. திவாலான திறைசேரியே கிடைத்தது”

அனுர திஸாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்கும் போது, அவருக்கு ஒரு மந்திரக்கோல் வழங்கப்படவில்லை என்றும், திவாலான ஒரு திறைசேரியே வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் கூறியதாவது:

“நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் நெருங்கிவிட்டன. இந்த இரண்டு வருடங்களுக்குள் எங்களை திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். என்ன செய்வது? சகோதரர் அனுர திஸாநாயக்க ஜனாதிபதியான போது அவரது கையில் மந்திரக்கோல் எதுவும் கொடுக்கப்படவில்லை.

எங்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது திவாலாகிப் போன ஒரு திறைசேரி ஆகும். வாகனங்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. உரங்களை கொண்டுவர முடியவில்லை. எரிபொருளை கொண்டுவர முடியவில்லை. நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பிதமடைந்திருந்தது. அப்படிப்பட்ட ஒரு நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம்.”

Recent Articles

Back to top button