News

விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (30) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


அவருக்கு எதிராக முன்னர் தொடரப்பட்ட ஆறு வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலை சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த வழக்குகள் முன்னெடுக்கப்படுகின்றன.



இந்நிலையில், விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சந்திரகாந்தன் நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button