News

நாங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்த  இருந்த போது டீசல் விலையை குறைத்தது அரசாங்கத்தின் தவறான செயல் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடும் குற்றச்சாட்டு

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நாளை (01) முதல் அமுலுக்கு வரவுள்ள நிலையில், நேற்று (29) டீசல் விலை குறைக்கப்பட்டமை அரசாங்கத்தின் தவறான நடவடிக்கை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.



திட்டமிட்டிருந்த 20 சதவீத கட்டண உயர்வு தற்போது 15 முதல் 17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், இதனால் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



தேசிய கொள்கைக்கு ஏற்ப போதுமான கட்டண உயர்வு வழங்கப்படாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.



டீசல் விலை நிர்ணயம் மற்றும் கட்டண திருத்தம் தொடர்பாக அரசாங்கம் வெளிப்படையாக நடக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button