News

அமெரிக்க செனட்டரும், டிரம்ப்புடன் மிக நெருக்கத்தில் இருந்தவருமான லிண்ட்சே கிரஹாம், திடீர் உடல் நலக்குறைவால் காலமானார்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியான குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம், தனது 71-வது வயதில் காலமானார். “குறுகிய கால மற்றும் திடீர் உடல்நலக்குறைவால்”  அவர் உயிரிழந்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

2002-ல் செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தென் கரோலினா அரசியல்வாதியான இவர், வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் வாஷிங்டனின் மிகவும் செல்வாக்கு மிக்க குரல்களில் ஒருவராகத் திகழ்ந்தார்; மேலும், வெளிநாடுகளில் அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்காக அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.

கிரஹாம் ஒரு “உண்மையான அமெரிக்க தேசபக்தர்” என்றும், அவர் “மிகவும் இழக்கப்படுவார்” என்றும் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

மருத்துவப் பரிசோதகரின் முதற்கட்டக் கண்டுபிடிப்புகளின்படி, கிரஹாமின் மரணம் அவரது இதயத்தின் முக்கிய தமனியான பெருந்தமனி வெடித்ததால் ஏற்பட்டது என்று அவரது செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கிரஹாம் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவருடன் பேசியதாகவும், அந்த செனட்டர் “மிகவும் நன்றாக இருந்தார்” ஆனால் சற்றே சோர்வாகக் காணப்பட்டார் என்றும் டிரம்ப் என்பிசி நியூஸிடம் தெரிவித்தார்.

“பல விதங்களில் அவர் ஒரு கடினமான குணம் கொண்டவராக இருந்தார்,” என்று ஞாயிற்றுக்கிழமை என்பிசி-யிடம் டிரம்ப் கூறினார். “அவர் எதையாவது அடைய விரும்பினால், தான் சொல்வது சரி என்று நினைத்தால், தனக்கு எதிராக ஆட்கள் இருந்தாலும், அவர் உண்மையில் மிகவும் கடுமையாக நடந்துகொள்வார். ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் எனவும் ட்ரம்ப் தெரிவிப்பு.

இவர் பற்றி

லின்ட்ஸே கிரஹம்
————————–

ஜனவரியில் ”கியுபாவின் நாட்கள் எண்ணப்படுகின்றன,” என்று சொன்னான்.

பெப்ரவரியில், ”ஈரானின் நாட்கள் எண்ணப்படுகின்றன,” என்றான்.

மார்ச் மாதம், ”மரணிக்கும் வரை இஸ் RA யேலுடனேயே இருப்பேன்,” என்றான்.

கியுபா இன்னும் இருக்கிறது.. ஈரான் இன்னும் நிலைத்திருக்கிறது. ஆனால் அவன்தான் இல்லை.

”மரணிக்கும் வரை இஸ் RA யேலுடனேயே இருப்பேன்,” என்ற அவனது விருப்பம் நிறைவேறி விட்டது. ஆனால் அது அவ்வளவு விரைவில் முடியும் என்று நினைத்திருக்க மாட்டான்.

அவனால் சொந்த நாட்டுக்காக வாழும் வாய்ப்புக் கிடைக்கவேயில்லை. நம்மால் தெரிவு செய்யப்பட்டவன் நமக்காக வாழவில்லை என்கின்ற உணர்வு அவனது சொந்த நாட்டுக்காரனுக்குக் கூட இல்லை.

ஒரு சிறிய அசௌகரியம்  ”நான்தான் கடவுள்” என்ற அவனது நினைப்பைப் பிணப் பெட்டிக்குள் வைத்து விட்டது.

தினவும் அகங்காரமும் ஒருவரில் நீடித்திருக்க இறைவன் ஒரு போதும் அனுமதிதத்தில்லை.

”காஸாவைத் தரை மட்டமாக்குவோம்” என்று சொன்னவன் தரைக்குக் கீழே போக அவனுக்கு மேலே் தரை மட்டமாகத்தான் இருக்கும்! ( அஷ்ரப் சிஹாப்தீன் )

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button