News
மடவளையில் சுமார் 4 கிலோ தங்கத்துடன் 10 பேர் கைது – வத்தேகம பொலிஸாரினால் மேற்கொள்ளப் பட்ட இந்த சுற்றி வளைப்பில் 2 பெண்களும் கைது, 16.9 மில்லியன் ரூபாய் பணமும் மீட்பு

மடவளையில் உள்ள வாடகைக்கு தங்கும் விடுதி ஒன்றில் முன்னெடுக்கப் பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 3.930 கிலோகிராம் தங்கத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தேகம பொலிஸாரினால் இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதானவர்களில் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர்களிடம் இருந்து 16.9 மில்லியன் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்



