News

சாய்ந்தமருது அல்-ஜலால் மாணவி அனாபா, கொழும்பு பல்கலைக் கழகச் சட்டபீடத்திற்குத் தெரிவாகி சாதனை படைத்தார்



பாறுக் ஷிஹான்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில், சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் சாதனை மாணவி எம்.ஏ.எப். அனாபா, நாட்டின் முதற்தரப் பல்கலைக்கழகமான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம்மாணவி தனது ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திலேயே கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இவர் 2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளையும், 2025 (2026) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 5 ஆம் இடத்தினையும் பெற்றுப் பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்திருந்தார்.

பாடசாலையிலிருந்து நாட்டின் முதன்மைப் பல்கலைக்கழகச் சட்டபீடத்திற்குத் தெரிவாகிச் சாதனை படைத்த மாணவி எம்.ஏ.எப். அனாபாவிற்கு அல்-ஜலால் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அடங்கிய பாடசாலைச் சமூகம் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

Thanks & Best Regards,

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්‍යවේදී

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button