News

கருவாட்டின் விலைகள் தாறுமாறாக அதிகரிப்பு !

திறந்த சந்தையில் ஒரு கிலோ கருவாட்டின் சில்லறை விலை சுமார் 3000 ற்க்கும் மேல் விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

கீளான், பலயா, இறால், சுறா, தரா (தோர்) கருவாடுகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. உலர் நெத்தலி ஒரு கிலோவின் சில்லறை விலையும் 2,000 ரூபாய்க்கு அருகில் வந்துள்ளது.

துண்டு கருவாடுகளின் சில்லறை விலைகள் ஒப்பீட்டளவில் உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு கிலோ தோரா கருவாடு 3,200 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ சுறா கருவாடு 2,500 ரூபாய் முதல் 3,200 ரூபாய் வரையிலும் பல்வேறு விலைகளில் விற்கப்படுகின்றன.

கடல் காற்று தீவிரமடைந்தமை, எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வது கட்டுப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல காரணங்களால் சந்தையில் ஒரு கிலோ புதிய மீனின் சில்லறை விலையும் அதிகரித்துள்ளது.

அதற்கு ஒப்பாகவே கருவாட்டு விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஒரு கிலோ கீளான் கருவாட்டின் சில்லறை விலை 2,900 ரூபாயாகவும், மடை (மடு) மீன் ஒரு கிலோ 2,000 ரூபாயாகவும், பலயா மீன் ஒரு கிலோ 1,900 ரூபாயாகவும், இறால் ஒரு கிலோ 2,000 ரூபாயாகவும், அங்கூளு ஒரு கிலோ 1,950 ரூபாயாகவும், நெத்தலி ஒரு கிலோ 1,700 ரூபாயாகவும், உம்புலக்கடை (மத்தல்) ஒரு கிலோ 2,600 ரூபாயாகவும், சாளைய மீன் ஒரு கிலோ 1,300 ரூபாய் வரையிலும் அல்லது சில வேளைகளில் அதற்கும் அதிகமான விலைகளிலும் விற்கப்படுகின்றன.

இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு மக்களுக்கு நிவாரணமளிக்கும் முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

– நிமல் குணதிலக

Recent Articles

Back to top button