News

பொலிஸ் நிலையத்திற்கு பல்வேறு சேவைகள் ஊடாக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்ட பெண் பொலிஸ் சாஜண்ட் கைது

இங்கினியாகல காவல் நிலையத்துக்கு பல்வேறு சேவைகள் ஊடாக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அதே காவல் நிலையத்தில் கடமையாற்றிய பெண் காவல்துறை சாஜண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட உள்வாரி கணக்காய்வு பரிசோதனையின் போதே இந்த நிதி முறைக்கேடு கண்டறியப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் பெறப்படும் வருமானப் பணத்தை, அம்பாறை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் முறையாக வைப்பிலிட வேண்டும்.

எனினும், சந்தேகநபரான பெண் காவல்துறை சாஜண்ட் காவல் நிலையத்துக்குப் பெறப்பட்ட அந்த பணத்தைச் வைப்பிலிடாது தவறியுள்ளமை கணக்காய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, அம்பாறை பிரதி காவல்துறை மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் உத்தரவின் பேரில், அம்பாறை வலய பதில் உதவி காவல்துறை அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button