அனைத்து மக்களின் வாயிலும் “மெட்ரோ, மெட்ரோ” என்ற வார்த்தையே இருந்தாலும், எனக்கு மக்களின் பணத்தை பற்றிதான் கவலையே ; பஸ் கெமுனு

50 ஆண்டுகளாக நமது பேருந்துகளில் பயணித்த மக்கள் இன்று புதிதாகப் பிறந்ததைப்போல் பேசுகிறார்கள் – மெட்ரோ பேருந்துகள் குறித்து பஸ் கெமுனு கருத்து
புதிய மெட்ரோ பேருந்து சேவை குறித்து கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, 50 ஆண்டுகளாக தனியார் பேருந்துகளில் பயணித்த மக்கள் இன்று மெட்ரோ பேருந்துகளைப் பற்றி புதிதாகப் பிறந்ததைப் போல் பேசுகிறார்கள் என்று தெரிவித்தார் .
இன்று அனைவரின் வாயிலும் “மெட்ரோ, மெட்ரோ” என்ற வார்த்தையே உள்ளது என்றும், மெட்ரோ என்று கூறினாலும் இதுவும் இலங்கை போக்குவரத்து சபையே (SLTBO) என்றும், தான் இதற்கு முன்பும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதால் ஒருபோதும் வீழ்ச்சியடையப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இது நாட்டின் மக்களை ஏமாற்றும் ஒரு அரசியல் விளையாட்டு என்று குற்றம் சாட்டும் அவர், மக்களின் பணத்தைக் குறித்தே தான் கவலைப்படுவதாகவும், இன்னும் 6 மாதங்களில் இந்த மெட்ரோ பேருந்துகளுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம் என்றும் மேலும் தெரிவித்தார்.



