News

இலங்கையில் 24 இணையதளங்கள் முடக்கம் (Block)

இலங்கையில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த 24 இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய இணையதளங்களை (Online gambling and betting websites) உடனடியாக அமலுக்கு வரும் வகையில் முடக்குவதற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) நடவடிக்கை எடுத்துள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட விளையாட்டு ஒழுங்குமுறை அதிகாரசபையினால் செய்யப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாகவே, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட விளையாட்டு ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆம் பிரிவுகளின்படி, செல்லுபடியாகும் உரிமங்களைப் பெறாமல் இணையவழி சூதாட்ட சேவைகளை நடத்துவதும் விளம்பரப்படுத்துவதும் அச்சத்துறையின் 44 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதற்கமைய, குறித்த சட்டவிரோத இணையதளங்களை நாட்டில் இருந்து அணுகுவதைத் தடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

நாட்டின் சட்டக் கட்டமைப்பிற்கு முரணாகச் செயல்படும் இத்தகைய அனுமதி பெறாத இணையவழி சூதாட்டத் தளங்களில் ஈடுபடுவதையோ அல்லது அவற்றில் பணத்தை முதலீடு செய்வதையோ தவிர்க்குமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு என்பன பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளன.

முடக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியல்:

1. 1xbet.com

2. betway.com/en-lk

3. 22bet.com

4. melbet.com

5. unibet.com

6. betfair.com

7. dafabet.com

8. bet365.com

9. 1win.com

10. spinbetter.com

11. 10cric.com

12. bc.game

13. megapari.com

14. pin-up.bet

15. stake.com

16. mostbet.com

17. parimatch.com

18. betwinner.com

19. linebet.com

20. 4rabet.com

21. rajabets.com

22. dbbet.com

23. coldbet.com

24. WinWin

Recent Articles

Back to top button