News
சிறைச்சாலைகளில் ஏன் தொடர்ந்து பிரச்சினைகள், பதற்ற நிலைகள் ஏற்படுகின்றன? பொறுப்பான அமைச்சர் பாராளுமன்றத்திற்கு விளக்கம் தெரிவிக்க வேண்டும் : சஜித் கோரிக்கை

சிறைச்சாலைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சிறைச்சாலைகள் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் பாராளுமன்றத்திற்கு விளக்கம் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று மகஸின் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தினால் ஒரு மரணமும், குருவிட்ட சிறைச்சாலையில் இரண்டு மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
தற்போது பல்லன்சேனை கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், இது தொடர்பில் நீதி அமைச்சர் இந்த சபைக்கு நிலைமைகளை தெளிவுபடுத்துவது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



