News

இருபது ஆண்டுகளுக்கு திசைகாட்டி (மாலிமாவ) அரசாங்கம்தான்.. வேறு யாரும் இல்லை…

வரலாற்றில் மிக அதிகமான மக்கள் ஆணையை வழங்கி, நாட்டின் வளர்ச்சிக்காகவும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காகவுமே மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்தனர் என்றும், எதிர்வரும் 20 ஆண்டுகள் வரை இந்த ஆட்சியே தொடரும் என்றும் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஊழல் நிறைந்த ஆட்சி முறையை மாற்றுவதற்காகவே பாராளுமன்றத்தில் 159 ஆசனங்கள் என்ற பெரும்பான்மையை மக்கள் வழங்கியதாகக் குறிப்பிட்டார்.

அதற்கேற்ப, குற்றவாளிகள், ஊழல்வாதிகள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு தராதரம் பாராமல் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும், நீதித்துறை தற்போது சுயாதீனமாக இயங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தால் எதிர்க்கட்சியினர் கடும் அச்சமடைந்துள்ளதாகவும், அந்த பயத்தினாலேயே அரசாங்கத்தைக் கவிழ்க்க அவர்கள் முயற்சி செய்த போதிலும், எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கத்தைத் தவிர வேறு ஆட்சிக்கு இங்கு இடமில்லை என்றும் ரணசிங்க வலியுறுத்தினார்.

இ நாட்டில் காணப்பட்ட ஊழல் நிறைந்த மற்றும் திவாலான அரசியல் கலாச்சாரம் என்றென்றைக்குமாக முடிவுக்கு வந்துவிட்டது என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button