News

இந்த சூழ்நிலையில் அரசாங்கம் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் ஏதேனும் ஒரு தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருவதால், ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் அரசாங்கம் ஏதேனும் ஒரு தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“22 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு (Referendum) ஒன்றை அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களில் எதாவதொன்றை அரசாங்கம் கட்டாயம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனினும், இப்போதைக்கு பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் எதனையும் நடத்துவது சாத்தியமில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெரிட்டே ரிேசர்ச் (Verite Research) நிறுவனம் வெளியிட்ட அறிக்கையொன்றில், அரசாங்கத்தின் ஜனரஞ்சகத் தன்மை மற்றும் செல்வாக்கு குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறித்தே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button