உண்மையில் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் போன்ற முட்டாள் முஸ்லிம் அரசியல்வாதிகள் உலகில் இருக்க முடியாது ; முபாறக் மெளலவி

இந்த நாட்டின் வரலாற்றில் எந்தக்கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கிறாரோ அவரின் கட்சிதான் பொதுத்தேர்தலில் வெல்லும்.
ஜே ஆர், சந்திரிக்கா, மஹிந்த போன்றோரின் கட்சிகள் இப்படித்தான் ஆட்சியில் இருந்தன.
அதனை மீறி எதிர்க்கட்சி ஆட்சியை பிரட்டி ஆட்சிக்கு வந்தாலும் நீடிக்க முடியாது என்பதற்கு 2003 ரணிலின் ஆட்சி கலைப்பு சொல்கிறது.
இதுவெல்லாம் தெரிந்தும் 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார வென்று ஜனாதிபதி ஆனதும் இந்த முஸ்லிம் கட்சிகள் என்ன செய்திருக்க வேண்டும்?
புத்தி இருந்தால் அநுர குமார கட்சியுடன் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும்.
அப்படி செய்யாமல் தோற்றுப்போன ஜனாதிபதி வேட்பாளரின் கட்சியில் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டமை எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
அந்த நேரத்தில் நான் ரிசாத் பதியுதீனுக்கு போன் செய்து இந்த யதார்த்தத்தை சொன்னேன், கேட்கவில்லை.
தனித்து போட்டியிட்டு வென்றிருந்தால் சஜித்தின் அடிமை கட்சி என இல்லாமல் அரசிடம் ஒரு கௌரவம் இருந்திருக்கும்.
அப்படி சுதந்திரமான கட்சிகளாக பாராளுமன்றில் இருந்திருந்தால் கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடை பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு எதிரான இனவாத செயல்களுக்கு அரசிடம் கௌரவமான தீர்வை பெற்றிருக்க முடியும்.
ரவுப் ஹக்கீம் அடிக்கடி சொல்லும் வார்த்தைதான் நாங்கள் கண்ணை திறந்து கொண்டு படுகுழியில் விழுந்து விட்டோம் என்பது. அவர் பின்னால் போன ரிசாத் பதியுதீனும் அதே படு குழியில் விழுந்து படு குழியில் விழுந்த யானை வெளிவர முடியாமல் தவிப்பது போல் தவிக்கிறார்.
முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் பணம், பதவிக்கான வெறி இருக்கும் வரை சமூக அரசியலில் வெல்ல முடியாது.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
தலைவர்
இலங்கை உலமா கட்சி,
ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் உலமா கவுன்சில்.



